Download App Open in App

'மாநகரம்' படத்தின் மலைக்க வைக்கும் 2வது வார வசூல்

  • IndiaGlitz, [Monday,March 20 2017,]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா நடித்த 'மாநகரம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்றது. கதை சொல்லிய விதம், கடைசி வரை சென்ற விறுவிறுப்பாக திரைக்கதை ஆகியவை சூப்பர் ஸ்டார் ரஜினியே பாராட்டும் அளவுக்கு இருந்தது.
 

இந்நிலையில் பெரிய ஸ்டார்கள் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த 'மாநகரம்' முதல் வாரத்தில் கிடைத்த அபார வசூல் காரணமாக கடந்த திங்கள் முதல் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக முதல் வாரத்தைவிட இரண்டாவது வாரத்தில் அதிக வசூல் பெற்று வெற்றிப்படம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த வார இறுதியில் சென்னையில்  12 திரையரங்குகளில் 83 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.25,83,610 வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி திரையரங்குகளில் 2வது வாரத்திலும் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த படம் கடந்த 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னையில் ரூ.67,11,280 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest News