Download App Open in App

சந்திரஹாசன் மறைவிற்கு ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • IndiaGlitz, [Monday,March 20 2017,]

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் அவர்களின் திடீர் மறைவு கமல் குடும்பத்தினர் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் கமல்ஹாசனின் மிக நெருக்கமான நண்பர்களான ரஜினிகாந்த் மற்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கல் அறிக்கையில், 'என்னுடைய நண்பர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்' என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

அதேபோல் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், 'சகோதரரை இழந்து வாடும் நடிகர் கமலஹாசனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்' என தெரிவித்துள்ளார்.

மேலும் கோலிவுட் திரையுலகினர், அரசியல்வாதிகள் உள்பட பலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சந்திரஹாசன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest News