Download App Open in App

ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' ஓப்பனிங் வசூல் விபரங்கள்

  • IndiaGlitz, [Monday,March 20 2017,]

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்த 'புரூஸ்லீ' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கடும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஊடகங்களாலும், சமூக வலைத்தளங்களாலும் முதல் காட்சி முடிந்தது முதலே கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டதால் சராசரிக்கும் குறைவாகவே இந்த படம் ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.
 

சென்னையில் இந்த படம் 22 திரையரங்க வளாகங்களில் 223 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.52,64,370 மட்டுமே வசூல் பெற்றது. மேலும் திரையரங்குகளில் 55% மட்டுமே பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷின் முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகவும் குறைவு. மேலும் ஜி.வி.பிரகாஷ் தனது கேரக்டரையும், கதையையும் தேர்வு செய்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை தரும் படமாகவே அவருக்கு இந்த படம் அமைந்துள்ளது.

 

Latest News