Download App Open in App

ஆரம்பமே அட்டகாசம்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜீவா நன்றி

  • IndiaGlitz, [Friday,April 21 2017,]

'லொள்ளுசபா' ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு சற்று முன்னர் நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டில் இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டார். 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் பாடல்களை வெளியிட்ட சூப்பர் ஸ்டாருக்கு ஜீவா தனது நன்றியை சமூக  வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

'தலைவரின் ஆசியுடன் 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் இசை இன்று முதல் வெளியாகியுள்ளதாகவும், இந்த படத்தின் பாடல்களை வெளியிட்ட அன்பு தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜீவா, சங்கீதா செளஹான், பாண்டியராஜன், வையாபுரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Latest News